| மதி
நுட்பம், அறன் அறிதல், சொல்வன்மை, ஆகியவை எந்த
வகையில், அமைச்சரின் தகுதிகளாக அமைந்துள்ளன என்பது
முதலில் கூறப்படுகிறது. அடுத்த நிலையில்,
அமைச்சரின்
ஆற்றல்கள் விளக்கப்படுகின்றன. ஆட்சியில் அமர்ந்திருக்கும்
மன்னருக்கு யாரை நண்பராகக் கொள்ளலாம்,
யாரை
நண்பராகக் கொள்ளக் கூடாது போன்ற
அறிவுரைகளை
அமைச்சர் கூறுவது பற்றிய செய்திகள் விளக்கப்படுகின்றன.
உடனிருந்து கொண்டே, கேடு நினைத்தல், செயல் ஆற்றல்
இல்லாதிருத்தல் போன்றவைகள் அமைச்சருக்குத் தகாதவை
என்பது பற்றியும் இந்தப்பாடம் கூறுகிறது.
|