C03144 : நாடு


இப்பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

E

இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும்பொழுது நீங்கள்
கீழ்க்காணும்     பயன்களைப்     பெறுவீர்கள் என்று
எதிர்பார்க்கிறோம்.

  • ஒரு நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையானவை எவை
    வேண்டாதவை எவை என அறிதல்.

  • ஒரு நல்ல நாட்டிற்கு வள்ளுவர் கூறும் இலக்கணம்
    இக்காலச் சூழலுக்குப் பொருந்துமா என ஒப்பு
    நோக்கல்.

  • வள்ளுவர் கூறும் நல்ல நாட்டிற்கான இலக்கணத்தைக்
    கொண்டு பண்டைத்தமிழரின் அறிவு வளர்ச்சி
    நிலையையும், பண்பாட்டு முதிர்ச்சியையும் மதிப்பிடுதல்.