| எழுதப்படுகின்ற
எல்லா நூல்களும், காலத்தை வென்று வாழும்
தகுதி உடையன அல்ல. ஒரு சில நூல்களே என்றும் அழியாத
புகழ் பெற்றுத் திகழ்கின்றன. அவற்றுள் ஒன்று திருக்குறள்.
இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முன்னர் வள்ளுவர் வாழ்ந்ததாகக்
கூறப்படுகிறது. அக்காலத்தில் வள்ளுவர் கூறிய
அறிவியல்
கருத்துகளை நோக்கும் பொழுது, வள்ளுவருக்கு அறிவியல்
முதிர்ச்சி இருந்திருக்க வேண்டும். அல்லது அவர்
வாழ்ந்த
காலக்கட்ட மக்களின் அறிவியல் அறிவை வெளிப்படுத்தும் காலக் கண்ணாடியாக
வள்ளுவர் திகழலாம். எது எவ்வாறு இருப்பினும்
திருக்குறள் மூலம் நாம் அறிந்து கொள்ளும்
அறிவியல்
கருத்துகள், இன்றைய நூற்றாண்டில் நடை முறையில் இருக்கும்
அறிவியல் தத்துவங்களோடு ஒத்துச்செல்கின்றது
என்பதை
எண்ணும்போது, ஒரு பக்கம் வியப்பு
ஏற்பட்டாலும்
இன்னொருபக்கம் வள்ளுவரின் அறிவியல்
அறிவைப்
பாராட்டாமல் இருக்க இயலாது.
இன்றைய
நிலையில் வளர்ந்துள்ள அறிவியல் பிரிவுகளான
மருத்துவம், வளோண்மை, இயற்பியல், வேதியல், தாவரயியல்,
விலங்கியல் போன்றவற்றின் அடிப்படைத் தத்துவங்கள் பலவற்றை
வள்ளுவரின் திருக்குறளில் பார்க்க முடிகிறது.
அவைபற்றிய
கருத்துகள் இப்பாடத்தில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.
|