|
|
|
6.2
வளோண்மை
|
| ஒரு
நாட்டின் உணவு உற்பத்தியில் பெரும் பங்கு
வகிப்பது
வளோண்மை. அறிவியல் சாதனைகளின் வாயிலாக, வளோண்மைத்
துறையில் பல மாறுதல்கள், புரட்சிகள் ஏற்பட்டுள்ளன.
உலக
நாடுகளில், முன்னேறிய நாடுகளாகக் கருதப்படும்,
சப்பான்,
அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள்,
வளோண்மைத்
துறையில் அடைந்த முன்னேற்றமே, அவற்றை
முன்னேறிய
நாடுகளாக உயர்த்தி உள்ளது.
|
|
ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் பொருளாதார மேம்பாட்டிற்கும்
அடிப்படையாக அமைவது வளோண்மை.
இத்தகைய
வளோண்மையைப் பற்றி வள்ளுவர் பல அரிய
கருத்துகளை
வழங்கியுள்ளார். அவற்றில் பெரும்பாலானவை,
இன்றைய
அறிவியல் அடிப்படையிலான வளோண்மைத்
துறைக்கும்
பொருந்தும் வகையில் அமைந்துள்ளன.
|
|
6.2.1 நீர்வளம்
|
| ‘தாயைப்
பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே’ என்பது ஒரு
பழமொழி. ஒரு குழந்தை கருவாக உருவானதிலிருந்து, அதைப்
பெற்று வளர்த்து உருவாக்கும் பொறுப்பை வகிப்பவள்
தாய்.
அத்தகைய தாயைக் கூட, தவிர்க்க
முடியாத சூழலில்
புறக்கணித்து அல்லது விட்டு விட்டு வாழலாம். ஆனால், எந்த
ஒரு சூழலிலும் தண்ணீரை மட்டும், புறக்கணிக்க
முடியாது,
என்பதே இதன் பொருள். நீரில்லாமல்
உயிர்கள் வாழ
இயலாது என்பதே இப்பழமொழி
தரும் செய்தி.
நீரின் இத்தன்மையை நன்கு உணர்ந்த வள்ளுவர்,
|
|
நீரின்றி
அமையாது உலகு எனின் யார் யார்க்கும்
வானின்றி அமையாது ஒழுக்கு
|

(குறள்: 20)
|
|
|
(ஒழுக்கு = நீர் ஒழுக்கு, வான் = வானத்திலிருந்து பெய்யும்
மழை)
என்று
குறிப்பிடுகிறார்.
எவ்வகை
மேம்பட்டவராக இருந்தாலும் தண்ணீர் இல்லாமல் இந்த
உலகத்தில் வாழ இயலாது. அந்த நீரும் இடைவெளி இல்லாமல்
தொடர்ந்து ஒழுக வேண்டுமானால்அதற்கு மழை வேண்டும். மழை
இல்லாமல் ஒரு புல்கூட முளைக்காது. மழை இல்லை என்றால்
நாட்டில் வறுமை வரும். போராட்டங்கள் நிகழும். மக்களிடையே
ஒழுக்கம் இருக்காது. மக்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டுமானால்
மழை வேண்டும். இந்த உண்மையை வலியுறுத்த
மழையின்
சிறப்பைப் பற்றி ஒரு அதிகாரத்தையே வள்ளுவர் இயற்றியுள்ளார்.
•
பதினேழாம் நூற்றாண்டின் கருத்து
அறிவியலை அடிப்படையாகக் கொண்டு மழையைப் பற்றிப்
பல்வேறு வகையான ஆய்வுகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. இத்தகைய ஆய்வுகளின்
வாயிலாக, பதினேழாம் நூற்றாண்டில்தான்
இந்த உலகம் நீரின்றி அமையாது; அந்த நீரும் மழையில்லாமல்
அமையாது என்று உறுதி செய்யப்பட்டது. பதினேழாம்
நூற்றாண்டில் உறுதி செய்யப்பட்ட இந்த அறிவியல் உண்மையை
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே
வள்ளுவர்
குறிப்பிட்டுள்ளார் என்றும், இது வள்ளுவர் வாழ்ந்த காலத் தமிழ்
மக்களுடைய அறிவு நிலையைக் காட்டுகிறது என்றும், அன்றைய
சூழ்நிலையில் வளர்ந்திருந்த கலைகள்
அனைத்தையும்
ஈடுபாட்டுடனும் தெளிவுடனும வள்ளுவர் அறிந்திருந்தார் என்றும்
நீரியல் (Hydrologes) துறை
வல்லுநர் அறிஞர்
வா.செ.குழந்தைசாமி அவர்கள் குறிப்பிடுகிறார்.
|
|
6.2.2 பயிரிடுதல்
|
| வளோண்மைத்துறையில்,
பயிரிடுதல் பற்றிப் பலவகையான
ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன. காலந்தோறும்
புதிய புதிய
முறைகளைச் சோதனை செய்து வருகின்றனர்.
பயனுடைய சோதனைமுறைகளைப் பின்பற்றி வருகின்றனர்.
அமெரிக்கா,
சப்பான் போன்ற முன்னேறிய நாடுகள் இத்தகைய ஆய்வுப்
பணிகளில் முன்னோடியாகத் திகழ்கின்றன.
தம்
ஆய்வுகளின் வாயிலாகப் புதிய புதிய
பயிர்வகைகளை
உருவாக்கி உள்ளனர். புதிய பயிரிடும்
முறைகளையும்
கண்டுபிடித்து உள்ளனர். நிலத்தைப் பக்குவப்படுத்துவதிலிருந்து
உரம் இடுதல் வரையிலும் பல புதுமைகளைக் கண்டுள்ளனர். எந்த
எந்த வகை உரங்களை, எந்த எந்தப் பயிர்களுக்குப் பயன்படுத்த
வேண்டும். அவற்றின் அளவு எவ்வாறு இருக்க
வேண்டும்
என்பனவற்றை வளோண்மை ஆய்வுகள்
மூலமாகத்
தீர்மானித்துள்ளனர். இவை நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
ஆனால பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே,
பயிரிடுதலில்
அறிவியல் சிந்தனைகளைத் தமிழர்கள் வெளியிட்டுள்ளனர்.
எடுத்துக்காட்டாக, ஒரு நிலத்தை
எவ்வாறு
பக்குவப்படுத்த வேண்டும், அதற்குப் பின்பற்ற வேண்டிய
முறைகள் எவை என்பவனவற்றைக் கணக்கிட்டுள்ளனர்.
•
நிலத்தைப் பக்குவப்படுத்தல்
பயிரிட நினைக்கும் ஒரு நிலத்தை முதல் நிலையில், பக்குவப்
படுத்த வேண்டும். அதை எவ்வாறு பக்குவப் படுத்துகிறோமோ,
அதற்கேற்பவே அதில் பயிரிடும் பயிரின் வளர்ச்சியும் பலனும்
இருக்கும். எனவே நிலத்தைப்
பக்குவப் படுத்தல்,
வளோண்மையில் முக்கியமான ஒரு கூறு. இந்த உண்மையை
உணர்ந்த வள்ளுவர், நிலத்தைப் பக்குவப்
படுத்துவதற்கு
அறிவியல் அடிப்படையிலான ஒரு
நடைமுறையைக்
குறிப்பிடுகின்றார்.
•
உரம் இடல்
ஒரு நிலத்தை உழுபவன், உழுத நிலத்தில் ஒரு பலம் அளவுள்ள
புழுதி காற்பலம் ஆகுமாறு அதை வெயிலில் உலர
விட
வேண்டும். அவ்வாறு உலர விடுவானாயின், பயிரிடும் பொழுது
ஒரு கைப்பிடி அளவு உரம் கூட அந்த நிலத்தில் இடவேண்டாம்.
உரம் இடாமலே பயிர் தானாகவே செழித்து வளரும் என்கிறார்
வள்ளுவர்.
|
|
தொடிப்
புழுதி கஃசா உணக்கின் பிடித்து எருவும்
வேண்டாது சாலப்படும்
|

(குறள்:1037)
|
|
|
(தொடி = ஒரு பலம் (பலம்
- ஒர் அளவு) , கஃசு = காற்பலம்,
உணக்கின் = உலர வைத்தால், பிடித்து = ஒரு கைப்பிடியில்
அடங்குகின்ற, எரு = உரம், வேண்டாது = தேவைப்படாமல்,
சால = செழித்து, படும் = வளரும்)
அளவு
முறை (Measurement) நடைமுறையில்
இல்லாத
காலத்திலேயே, பயிரிடுவதில் பயன்படுத்த வேண்டிய
அளவு
முறைகளைப் பற்றி வள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். அந்த அளவு
முறையிலும், நிலத்தை எவ்வாறு பக்குவப்படுத்த வேண்டும் என்று
அறிவியலின் அடிப்படையில் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு பலம்
என்பது பண்டைக் காலத்தில் உள்ள ஓர் அளவுப் பெயர். ஒரு
பலம் அளவுள்ள புழுதி கால்பாகம் ஆகும் அளவுக்கு நிலத்தை
உலர விட வேண்டும். வெயிலில் புழுதி காயும்
பொழுது,
களைகள் அழிந்துவிடும். பயிருக்குத் தீங்கு
விளைவிக்கும்
தன்மையிலுள்ள புழுப்பூச்சிகள் கூட இறந்து விடும். புழுதியும்
நன்குப் பக்குவமாய் உலர்ந்து விடும். அவ்வாறு உலர்ந்தால்
அது கெட்டியாக இல்லாமல் பொடிந்து விடும். பயிரின்
வேர்
எளிதில் புகுந்து செல்லும் அளவுக்கு மென்மைத்தன்மையும்
அடையும். என்பன போன்ற உழவுத் தொழில்
நுட்பத்தை
வள்ளுவர் இதில் அடக்கியுள்ளார்.
இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முன்னர், உழவுத் தொழில்
மனிதனின் உணவுத் தேவையை நிறைவு செய்தது. அதிலும் ஒரு நெறிமுறையைப்
பின்பற்றிச் செயல்படுத்தினால், எளிய வழிகளில்
மிகுதியான ப யன்களை அடையலாம் என்பதனை வள்ளுவர்
அறிந்திருக்கிறார். உழவுத்தொழிலை மேற்கொள்ளும் வருங்காலத்
தலைமுறையினரும் அந்த நெறி முறையைப் பின்பற்ற வேண்டும்
என்று கருதியிருக்கிறார். எனவே எல்லோரும் பயன்பெறும்
வகையில் வள்ளுவர் உழவு என்ற தலைப்பில்
இதைக்
குறிப்பிட்டுள்ளார்.
|
|
தன் மதிப்பீடு : வினாக்கள் -
I
|
|
1.
|
வள்ளுவர் கூறும் மருத்துவ முறைகள் யாவை?
|
|
|
2.
|
மருத்துவப் பகுதிகளாக வள்ளுவர் கூறுவன
யாவை?
|
|
|
3.
|
எத்தகைய
உண்வை உண்டால் உயிருக்குத்
துன்பம் இல்லை என்று கூறுகின்றார்?
|
|
|
4.
|
யாருக்கு மருந்து என ஒன்று வேண்டாம்?
|
|
|
5.
|
இந்த
உலகத்தில் எது இல்லாமல் வாழ முடியாது?
|
|
|
6.
|
எத்தகைய
நிலத்திற்கு உரம் இட வேண்டாம்?
|
[விடை]
|
|
|
|