இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
இன்றைய மருத்துவ அறிவியலாளர்களும் ஏற்கக்தக்க மருத்துவம் பற்றிய வள்ளுவர் கூறும் கருத்துகள்.
நீரின் இன்றியமையாமையும், அது பற்றிய அறிவியல் சார்ந்த வள்ளுவரின் கருத்து,
வளோண்மைத் துறையில் பயிரிடுதலைப் பற்றிய செய்திகள்.
வள்ளுவர் கூறும் தாவரவியல் மற்றும் உயிரியல் தத்துவங்கள்.
எதிர் ஒளிப்பு என்னும் இயற்பியல் தத்துவத்தை வள்ளுவர் பயன்படுத்தியுள்ளமை.
கணிதத்தில் எண்ணின் இன்றியமையாதத் தன்மை.
வள்ளுவருக்குத் தெரிந்த அறிவியல் அணுகுமுறை எத்தகையது என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.
இப்பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
வள்ளுவர் கூறும் மருத்துவ முறைகளைப் பற்றித் தெரிந்து கொள்வீர்கள்.
மருத்துவத்தின் இன்றியமையாத நான்கு பகுதிகள் எவை என்பதை அறிந்து கொள்வீர்கள்.
உடலுக்கு ஒவ்வாத உணவுகளை உண்ணாமலிருந்தால் உடலுக்கு எத்தகைய நன்மை ஏற்படும் என்பது பற்றி வள்ளுவர் கூறும் அறிவுரையை ஏற்றுக் கொள்வீர்கள்.
உணவு செரித்தப் பின்னர்தான் உண்ண வேண்டும் என்ற வள்ளுவரின் அறிவுரையைப் பின்பற்ற முயல்வீர்கள்.
தேவைக்கு ஏற்ப அளவோடு உண்ண முயற்சி செய்வீர்கள்.
நீரின் தன்மையைப் பற்றி வள்ளுவர் கூறிய கருத்து எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதைத் தெரிந்து கொள்வீர்கள்.
தான் சொல்ல விரும்பிய கருத்துகளைப் புரிய வைப்பதற்கு வள்ளுவர் எத்தகைய உயிரியில், வேதியியல், இயற்பியல், உண்மைகளை , உவமையாகப் பயன்படுத்தியுள்ளார் என்பதைச் சிந்தித்துப் பார்ப்பீர்கள்.
அறிவியல் அணுகு முறையைப் பற்றி வள்ளுவர் கூறுவனவற்றை அறிந்து கொள்வீர்கள்.