1.1 பத்துப்பாட்டு


    பத்துப்பாட்டு என்பது பத்துப்பாடல்களால் ஆன ஒரு தொகுப்பு நூல் ஆகும். இதனைப் பத்து நூல்கள் என்று சொல்வதும் உண்டு. இத் தொகுப்பில் உள்ள பாடல்கள் (நூல்கள்)

திருமுருகாற்றுப்படை

பொருநராற்றுப்படை

சிறுபாணாற்றுப்படை

பெரும்பாணாற்றுப்படை

கூத்தராற்றுப்படை (அல்லது) மலைபடுகடாம்

முல்லைப்பாட்டு

குறிஞ்சிப்பாட்டு

மதுரைக்காஞ்சி

நெடுநல்வாடை

பட்டினப்பாலை

இவற்றை 1889-ஆம் ஆண்டில் டாக்டர் உ.வே.சாமிநாதையர் அச்சு நூல் வடிவில் கொண்டு வந்தார்.

1.1.1 பாடியோரும் பாடப்பட்டோரும்

பத்துப்பாட்டைப் பாடியோரும் பாடப்பட்டோரும்:

வ.
எண்

நூலின் பெயர்

பாடியோர்/ஆசிரியர்

பாடப்பட்டோர்

1.

திருமுருகு
ஆற்றுப்படை

நக்கீரர்

முருகக் கடவுள்

2.

பொருநர்
ஆற்றுப்படை

முடத்தாமக்
கண்ணியார்

கரிகால் பெரு
வளத்தான்

3.

சிறுபாண்
ஆற்றுப்படை

நல்லூர்
நத்தத்தனார்

நல்லியக்கோடன்

4.

பெரும்பாண்
ஆற்றுப்படை

கடியலூர்
உருத்திரங்கண்ணனார்

தொண்டைமான்
இளந்திரையன்

5.

கூத்தர்
ஆற்றுப்படை

பெருங்குன்றூர்ப்
பெருங் கௌசிகனார்

நன்னன் சேய்நன்னன்

6.
    

முல்லைப்பாட்டு

நப்பூதனார்

-

7.

குறிஞ்சிப்பாட்டு

கபிலர்

-

8.

மதுரைக்காஞ்சி

மாங்குடி மருதனார்

பாண்டியன்
நெடுஞ்செழியன்

9.

நெடுநல்வாடை

நக்கீரர்

-

10.

பட்டினப்பாலை

கடியலூர் உருத்திரங்
கண்ணனார்

-


பத்துப்பாட்டைப் பாடிய புலவர் எட்டுப்பேர்; பாடப்பட்டோர்
ஆறு பேர். அவற்றுள் ஆற்றுப்படை இலக்கியங்கள் ஐந்து. அக
இலக்கியங்கள் நான்கு. புற இலக்கியம் ஆறு. அக இலக்கியங்களில்
பாட்டுடைத் தலைவனின் பெயர் சுட்டப்பெறும் மரபு தமிழ்
இலக்கியங்களில் கிடையாது.

1.1.2 அடிவரையறையும் பா வகையும

பத்துப்பாட்டின் அடி அளவு மற்றும் பா வகை பின்வருமாறு :

வ.
எண்

நூலின் பெயர் அடிகள்

பா

1.

திருமுருகு ஆற்றுப்படை

317

ஆசிரியப்பா

2.

பொருநர் ஆற்றுப்படை

248

ஆசிரியப்பா

3.

சிறுபாண் ஆற்றுப்படை

269

ஆசிரியப்பா

4.

பெரும்பாண்
ஆற்றுப்படை

500

ஆசிரியப்பா

5.

கூத்தர் ஆற்றுப்படை

583

ஆசிரியப்பா

6.

முல்லைப்பாட்டு

103

ஆசிரியப்பா

7.

குறிஞ்சிப்பாட்டு

261

ஆசிரியப்பா

8.

மதுரைக்காஞ்சி

782

ஆசிரியப்பா,
வஞ்சிப்பா

9.

நெடுநல்வாடை

188

ஆசிரியப்பா

10.


பட்டினப்பாலை

301

ஆசிரியப்பா,
வஞ்சிப்பா

மொத்தம்

3552

பத்துப்பாட்டில் உள்ள மொத்த அடிகள் 3552. பத்துப்பாட்டில்
மிகப் பெரியது மதுரைக்காஞ்சி (782 அடிகள்); மிகச் சிறியது
முல்லைப்பாட்டு (103 அடிகள்). அனைத்தும் ஆசிரியப்பாவால்
ஆனவை.