சிறுபாணன்
ஒருவன் வறுமையில் வாடுகிறான். அவன்
தன் வறுமையைப் போக்கிப் பரிசு
வழங்குவாரைத் தேடிச் செல்கிறான். தான் மட்டும் செல்லாது தன் விறலியரையும் உடன் அழைத்துச் செல்கிறான். அவன் செல்லும் பாதை கடும்
வெப்பம் நிறைந்தும் நடத்தற்கு அரிதாகவும் உள்ள பாலை நிலப் பகுதி ஆகும். இப்பாலை நிலத்தின் வெம்மையும், விறலியரின்
அழகு நலனும் இப்பாடத்தில் விளக்கிக் கூறப்படுகின்றன. இச் செய்திகள் சிறுபாணாற்றுப்படையில் 1-40 அடிகளில் அமைந்துள்ளன. |