2.1 ஆற்றுப்படையின் சிறப்பு

அரசர் அல்லது வள்ளல்களிடம் பரிசு பெற்ற ஒருவன், பரிசு பெற
விரும்பும் மற்றொருவனுக்கு வழிகாட்டுவதே ஆற்றுப்படையின் பொது
இலக்கணம் ஆகும். இதனை,

“பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇ” என்று
தொல்காப்பியம் கூறுகிறது (பொருள், புறத்திணை, 88).

பரந்த உள்ளம்

'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்னும் பரந்த
உள்ளம் கொண்டவர்கள் பாணர்கள். வறுமையால் வாடிய தாங்கள்
பரிசு பெற்று வறுமை நீங்கியதைப் போலவே வறுமையுற்ற பிறரும்
பரிசு பெற்று வறுமை நீங்கி மகிழ்வுடன் வாழ வேண்டும் என்று
பாணர்கள் நினைத்தனர்.

இடம் பெறும் செய்திகள்

சிறுபாணாற்றுப்படையில் முதல் 40 அடிகளிலும் விரிவாகப்
பாலை நிலம், விறலியர் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.