பாடம் - 2

D01132 சிறுபாணாற்றுப்படை - 2

E


இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

இந்தப் பாடம் சிறுபாணாற்றுப் படையின் 1 முதல் 40 அடிகளுக்கு
உரிய விளக்கத்தைத் தருகிறது. சிறுபாணன் சென்ற பெருவழி
பாலை என்பதால் அந்நிலம் பற்றிய செய்திகளைக் குறிப்பாக
எடுத்துக்காட்டி, பின்பு சிறுபாணாற்றுப்படை கூறும் பாலை நிலக்
காட்சியை விளக்குகிறது. விறலியரின் அழகு நலத்தையும்
இயல்பையும் எடுத்துக் கூறுகிறது.


இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

சிறுபாணாற்றுப்படையின்     முதல் 40     அடிகளில்
கூறப்பட்டுள்ள செய்திகளை நன்கு விளங்கிக் கொள்ளலாம்.

வறுமையுற்ற பாணனின் வாழ்வியல் நிலையைப் புரிந்து
கொள்ளலாம்.

பாலை நிலத்தின் வெம்மையை உணரலாம்.

விறலியரின் அழகு நலனை இலக்கிய நுகர்வுடன்
அனுபவிக்கலாம்.


பாட அமைப்பு