பாணரின்
வறுமை நிலையைச்
சிறுபாணாற்றுப்படை
எப்படி வருணிக்கிறது?
பாணனின் வீட்டில்
உணவு சமைப்பதற்குத் தேவையான
அரிசி உள்ளிட்ட பொருள்கள்
இல்லாது அடுக்களை
வெறிச்சோடிக் கிடந்தது.
மிகவும் பழைமையானதும்
சிதைந்ததுமான வீட்டுச் சுவர். இதில்
கரையான் புற்றுக்
கிளம்பி இருந்தது. வீட்டுக் கூரையில் இருந்த
கழிகள்
(மூங்கில்கள் - வீடுகட்டப் பயன்படும்
மரம்) கட்டுகள்
அறுந்து கீழே விழுந்தன.
பாணனின்
மனைவி பசியால் இளைத்த
உடலை
உடையவள். வயிறு ஒட்டிக்
கிடந்தது. கைகளில்
வளையல்களைத் தவிர வேறு
அணிகலன்கள் எதுவும்
இல்லை. பசித்துன்பம் வாட்டியதால் தன் வீட்டுக்
குப்பையில் தானாகவே முளைத்துக்
கிடந்த
வேளைக்
கீரையைப் பறித்து வந்தாள். தன் கை நகங்களினால்
கிள்ளி
வேகவைத்தாள். பணச் செலவு இல்லாமல்
கிடைத்த அந்த
கீரைக்கு இட வேண்டிய உப்புக்கூட அந்த
வீட்டில் இல்லை.
எனவே, உப்பில்லாமலேயே
வெந்த கீரையை உண்ண
அவ்வீட்டில் உள்ள பலரும் காத்திருந்தனர்.
|