| 
 
  நடராசர் 
 திருமேனி 
 சிவபெருமானின் ஐந்து 
 தொழில்களைக் 
 குறிப்பதாகக் கொள்வர். 
 அதாவது 
 படைத்தல், காத்தல், 
 அழித்தல், மறைத்தல், அருளல் 
 ஆகும். நடராசரின் கைகளில் உடுக்கையும் 
 தீப்பிழம்பும் 
 உள்ளன. உடுக்கை படைத்தலையும் தீ 
 அழித்தலையும் 
 குறிப்பிடுகின்றன. கீழ் வலதுகை ‘அஞ்ச 
 வேண்டாம் 
 (அபயம்)’ என்பதைக் காட்டுகிறது.
 இதுவே காத்தலைக் 
 குறிப்பிடுகிறது.    
 காலின்    
 கீழுள்ள     முயலகன் 
 ஆணவத்துக்கும், அவன் 
 மீது ஊன்றிய கால் 
 மறைத்தலுக்கும் அடையாளம். தூக்கிய
 திருவடி அருளல் 
 என்பதைக் குறிக்கிறது.
 
   |