|
ஆடலுக்குரிய இலக்கண நூற்கள் பல இருந்தன.
இவைகளில் பல இறந்துவிட்டன. உரையாசிரியர்கள்
இந்நூற்களைப் பற்றியும், இந்நூற்களின் நூற்பாக்களையும்
ஆங்காங்கே பயன்படுத்தியுள்ளனர். இவைகளின் மூலம்
பண்டைய ஆடல் இலக்கண நூற்கள் பற்றி அறியும்
வாய்ப்புள்ளதனை இந்தப் பாடம் கூறுகிறது.
பண்டைய ஆடல் இலக்கண நூற்களில் கூத்த நூல்,
பஞ்ச மரபு, மகாபரத சூடாமணி, அவிநய தர்ப்பணம் என்ற
நூற்கள் தற்போது பதிப்பிக்கப்பட்டுள்ளன. இவைகளில்
காணப்படும் ஆடல் இலக்கணங்களை, நெறிமுறைகளை
இப்பாடம் எடுத்துணர்த்தியுள்ளது.
சிலப்பதிகாரம் ஒருவகையில் ஆடல் இலக்கியமாகவும்,
அதே நேரத்தில் ஆடல் இலக்கண நூலாகவும் அமைந்துள்ள
நிலையை இந்தப் பாடம் விளக்குகிறது. |