பாடம் 6

P10146 : சுஜாதாவின் புதினங்கள்

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    தமிழ் வாசகர்களால் பரவலாக அறியப்பட்ட எழுத்தாளர்
சுஜாதா. இவர் தமிழில் அறிவியல் கதைகள் எழுத
முன்வந்தவர்களில் முதன்மையானவர். இவர் எழுதிய
அறிவியல் புதினம் என் இனிய இயந்திரா. இந்தப் பாடம்
சுஜாதாவை அறிமுகம் செய்து அவர் எழுதிய என் இனிய
இயந்திரா என்ற புதினத்தின் மூலம் அவருடைய அறிவியல்
பார்வை, பாத்திரப்படைப்பு, நடைத்திறன் ஆகியவற்றை
விளக்குகிறது.


இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
இன்றைய நாவலாசிரியர்களில் அறிவியல் புதினங்களைப்
படைத்து வருபவர் சுஜாதா. இவர் அறிவியல் தொழில்
நுட்ப நுணுக்கங்களை எளிதாகவும் இயல்பாகவும்
புதினங்கள் மூலம் வெளியிடுவதை அறியலாம்.
பாமரரும் புரிந்து கொள்ளும் வகையில் பழமையில்
புதுமைகளைக் காணலாம்.
புதினத்தில் அறிவியலின் எண்ணற்ற வளர்ச்சிகளையும்
அவ்வளர்ச்சிகளின் விளைவுகளையும் காணலாம்.
இவர் துப்பறியும் நாவல் துறையில் புதிய உத்திகளை
மேற்கொண்டுள்ளதை அறியலாம்.