1.6 தொகுப்புரை
 

தமிழ் மொழியின் இன்றியமையாமையை உணர்ந்து, காலந்தோறும்
காத்து, பல வகைகளில் தொண்டாற்றிய பேரறிஞர்கள் பலர் தமிழ்
உரைநடையைச் செம்மைப்படுத்தியுள்ளனர்.
 

உரையாசிரியர்களின்      இடைவிடாத     முயற்சியாலும்
தொடர்பணியாலும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் உரைநடை ஓங்கி
வளர்ந்தது.
 

இருபதாம் நூற்றாண்டில் சிறுகதை, நாவல், நாடகம் போன்ற புதிய
இலக்கிய வடிவத்தால் தமிழன்னையைப் பலர் அழகுபடுத்தினர்.
 

தமிழுக்குப் பொருத்தமான வடிவம் தந்து எளிமையான,
இனிமையான நல்ல தமிழ் உரைநடையை நிலைக்கச் செய்தனர்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1.

தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல் எது? எழுதியவர்
யார்?

விடை

2.

தமிழ்த்தாத்தா என்று அழைக்கப்படுபவர் யார்?

விடை

3.

தனித்தமிழ் இயக்கத்தை ஏற்படுத்தியவர் யார்?

விடை