2. | வருணனைக்கும்,
எடுத்துரைத்தலுக்கும் உள்ள
வேறுபாடு யாது?
எழுதுவோர் ஒரு பொருளையோ மனிதரையோ இடத்தையோ
வருணிக்கும் நிலையில் அமையும்
உரைநடையை வருணனை உரைநடை என்பர்.
வருணனைக்கும் எடுத்துரைத்தலுக்கும் வேறுபாடு
உண்டு. ஒருபொருள் குறித்த தருணத்தில் எவ்வாறு
காட்சி தருகிறது என்று
காட்டும் வகையில் எழுதப்படுவது
வருணனை. அது
வரையப்பட்ட உருவப்படம் போன்றது. ‘கிளிக்’கென
எடுக்கப்பட்ட
புகைப்படக்காட்சி
போன்றது. தன்னளவில் இயக்கமின்றி ஸ்தம்பித்து நிற்பது.
எடுத்துரை என்பதோ ஓடிக்
கொண்டிருக்கும் திரைப்படத்தை
ஒத்தது. மாறிக் கொண்டே
இருக்கும் இயக்கநிலையைச் சித்திரிப்பது.
எடுத்துரை
உரைநடை கதையைப் பற்றிச்
சொல்வதன்று;
கதையையே சொல்வது.
|