உ.வே.சா.
ஒரு கவிஞர், பேச்சாளர், கட்டுரையாசிரியர், வாழ்க்கை
வரலாற்றாசிரியர்,
தன்வரலாற்றாசிரியர், தமிழ்ப்பேராசிரியர். இவை
எல்லாவற்றிற்கும் மலோக இவர் ஒரு
சிறந்த பதிப்பாசிரியர்,
ஓலைச்சுவடிகளில் இருந்த சங்கத்தமிழ்
நூல்களையும்
பெருங்காப்பியங்களையும், பிரபந்தங்களையும்
செம்மையான
முறையில் அச்சிலேற்றிப் பதிப்பித்த ‘பெருந்தமிழ்ச்செல்வர்’ இவர்.
‘தமிழ்த்தாத்தா’ உ.வே. சாமிநாதையர் சிறந்த உரையாசிரியராகத்
திகழ்ந்தவர். இவர் தமிழ் நூல்களை அச்சில் கொண்டு வந்ததோடு
முகவுரை, குறிப்புரை ஆகியவைகளை எழுதி ஆய்வு முறைக்கு
வித்திட்ட மிகச்சிறந்த உரையாசிரியர் என்பதை உணரலாம். |