5. | தமிழ்த் தாத்தாவின்
குறிப்புரை பற்றிக் கூறுக.
உ.வே.சா. தாம் பதிப்பித்த நூற்களனைத்திற்கும்
குறிப்புரை வரைந்துள்ளார்.
இக்குறிப்புரைகள்
அவரைச் சிறந்த
பதிப்பாசிரியராக உலகிற்கு
அறிமுகப்படுத்திப் பெருமை
சேர்த்துள்ளன.
இக்குறிப்புரைகள் அவரது பன்னூற் புலமையையும்,
நினைவாற்றலையும் சிறந்த ஆய்வுத் திறனையும்
விளக்கி நிற்கின்றன. மூலநூலில்
காணப்படும்
உவமைகள், மரபுச் செய்திகள், புராணக்
கதைகள்,
வரலாற்றுக் குறிப்புகள் ஆகியவற்றின்
விளக்கங்களும் இக்குறிப்புரையில்
இடம்
பெற்றுள்ளன. மூலத்தின் கீழே அடிக்குறிப்பாக
அமைந்த பகுதியே இங்குக் குறிப்புரை என்று
சுட்டப்பெறுகிறது.
|