தன் மதிப்பீடு - II : விடைகள்

5.

உ.வே.சா. வின் உரை நடை எவ்வாறு
அமைந்துள்ளது?

உ.வே.சா. எழுதியுள்ள பல்வேறு கட்டுரைகளும்,
வாழ்க்கை வரலாறுகளும் உரைநடைத் தமிழுக்கு
அவர் வழங்கிய கொடைகளாகும். பல்வேறு தலைப்புகளில் அவருடைய கட்டுரைகள் அமைந்துள்ளன. உ.வே.சா வின் எளிய நடைத்திறனுக்கு மூல காரணமாக அமைவது, எழுதும் அனைத்தும் மக்களுக்குப் புரியுமாறு எளிமையாக இருத்தல் வேண்டும் என்னும் உயரிய கருத்தேயாகும். உ.வே.சாமிநாதையரின் உரைநடை வருணனை முறையிலும், எடுத்துரை முறையிலும். நாடக முறையிலும், எள்ளல் முறையிலும் அமைந்துள்ளது.
 

முன்