தன் மதிப்பீடு - I : விடைகள்

7.

திரு.வி.க. உரைநடையின் வடிவத்தில் எத்தகைய
புதுமையைமேற்கொண்டார்?


“யான்     தமிழ்ப் போதகாசிரியனாயிருந்தவன்.
இப்பொழுது தமிழ்ப் பத்திரிகையாசிரியனானேன்.
தேசபக்தனுக்கென்று ஒரு தனிநடை கொண்டேன்.
சிறுசிறு     வாக்கியங்கள்      அமைக்கலானேன்.
எளிமையில் கருத்துகள் விளக்கும் முறையைப்
பற்றினேன். அந்நடையை நாடோறும் எழுதி
எழுதிப் பண்பட்டமையால் அதுவே எனக்கு
இயற்கையாகியது. பழைய தொடர் மொழிகளும்
கோப்பு மொழிகளும் என்னுள்ளேயே ஒடுங்கின.
சமயம் நேர்ந்துழிச் சிலவேளையில் அவை
தலைகாட்டும்” அவர்தம் உரைநடை வடிவம்
பழமைக்கும் இன்றைய புதுமைக்கும் சிறந்த உரம்
வாய்ந்த பாலமாய் விளங்கியது என அறிந்து
மகிழலாம்.

முன்