தன்மதிப்பீடு : விடைகள் - II

(1)

அண்ணாவின் உரைநடையில் காணப்படும் இலக்கியக்
கூறுகளில் இரண்டிற்கு எடுத்துக்காட்டுத் தருக.

    அண்ணாவின்     உரைநடையில்     காணப்படும்
இலக்கியக் கூறுகளில் எதுகைக்கும் மோனைக்கும்
எடுத்துக்காட்டுகளைக் காணலாம்.

எதுகை

    “ஆண்களின்     நெஞ்சமே     அப்படித்தான்;
கொஞ்சுவாளோ என்று கெஞ்சிக் கிடப்பார்கள்; ஆனால்
தஞ்சமென்று     வருபவர்களிடமோ     நஞ்சுபோல்
நடப்பார்கள்.

மோனை

    “அளகிரி மட்டுமா! அழகு தஞ்சையே
    அழிந்து படுமே, அன்னிய ஆட்சி
     ஏற்பட்டு விடுமே”

முன்