தன்மதிப்பீடு : விடைகள் - II | |
(2) |
அண்ணாவின் சொல்லடுக்குகளுக்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக. |
“பெற்றோம் வெற்றி - என்ற முழக்கம் குன்றுகளிலும் குடில்களிலும், அங்காடிகளிலும் அருவிக் கரைகளிலும், மாளிகைகளிலும், மலர்ப் பொழிலிலும், ஏரடிப்போர் இருக்குமிடத்திலும், ஏடுபடிப்போர் இருக்குமிடத்திலும் எழுந்தது” எனவரும் அண்ணாவின் அடுக்கு மொழிகளில் அமைந்தவை சொல்லடுக்குகளுக்கு எடுத்துக் காட்டு ஆகும். |