2.0 பாட முன்னுரை

அன்பு நிறைந்த     மாணவர்களே! முதற்பாடத்தில்
இரா.பி. சேதுப்பிள்ளையின் உரைநடை குறித்து அறிந்து
கொண்டீர்கள்.     இந்தப்     பாடத்தில் அண்ணாவின்

உரைநடையைப்     பற்றித்     தெரிந்து
கொள்வோம். ‘அறிஞர் அண்ணா’ என்று
தமிழ் மக்களால் அன்போடு அழைக்கப்படும்
அண்ணாவின் உரைநடையில் காணப்படும்
சிறப்புக்     கூறுகளை     இப்பகுதியில்
காண்போம்.     சென்னைப்     பல்கலைக்
கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக இருந்த
இரா.பி. சேதுப்பிள்ளையின் உரைநடைக்குப்


அறிஞர்
அண்ணா

பின்னர், தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பிற்குத் தலைமையாக
விளங்கும் முதலமைச்சர் பதவி வகித்த அண்ணாவின்
உரைநடையை அறிய முற்படுவது பொருத்தம்தானே?