தன்மதிப்பீடு : விடைகள் - I

(8)

பாவாணரின்     உரைநடை குறுந்தொடராகவும்
அமைந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

    பாவாணரின் பொழிவுகளில் அமைந்த தொடர்கள்
குறுந்தொடர்களாக அமைந்துள்ளன. குறுந்தொடருக்கு
எடுத்துக் காட்டு ஒன்றைக் காண்போம்.

    “இந்த நிலையிலே தொல்காப்பியம் ஒரு பழமையான நூல்தான். இருந்தாலும் அது ஆரியம் வந்த பிறகு ஏற்பட்ட நூல். அதிலே வடசொல் சொல்லப் பட்டிருக்கிறது. ஆரியரைப் பற்றிய குறிப்பும் இருக்கிறது. அதற்கு முற்பட்ட தமிழ்நூல் அனைத்தும் அழிந்தன. அழிக்கப்பட்டு விட்டன. அதை அறிய வேண்டும்.”

    இப்பத்தியின் தொடர்கள் படிப்பவரின் உள்ளத்தில் இனிய தமிழின் ஏற்றத்தைப் பதியச் செய்கின்றன.

முன்