மாணவர்களே! முந்தைய பாடத்தில்
பாவாணரின்
உரைநடையைப் பற்றி அறிந்து கொண்டீர்கள்.
இந்தப்
பாடத்தில் மு. வரதராசன் என்னும் மு.வ.வின்
உரைநடை
குறித்துத் தெரிந்து கொள்ளலாம். இருபதாம் நூற்றாண்டில்
தமிழ் உரைநடையைப் பயன்படுத்திப் பல புதுமைகளைச்
செய்தவர்களில் மு.வ. குறிப்பிடத்தக்கவர். மு.வ.வின் உரைநடை
தமிழில் எளிமையாகவும் தெளிவாகவும் இனிமையாகவும் எழுத
முடியும் என்பதற்குத் தக்கதொரு சான்றாகும். எனவே அவரது
உரைநடையின் தன்மைகளைப் புரிந்து கொள்வதற்குப்
புகுமுன்னர் அவரது வாழ்வையும் பணியையும் பற்றித் தெரிந்து
கொள்வோம். |