பாடம் 1

P20121 சிறந்த மொழிபெயர்ப்பு

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    இந்தப்பாடம் சிறந்த மொழிபெயர்ப்பு எப்படி அமைய
வேண்டும் என்பது     பற்றியும், அறிவியல் துறை
மொழிபெயர்ப்பு, கலைத்துறை மொழிபெயர்ப்பு ஆகிய
இரண்டும் எப்படி அமைய வேண்டும் என்பது பற்றியும்
அறிமுகமாகவும் விளக்கமாகவும் சொல்கிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    இந்தப் பாடம் படித்து முடித்த பிறகு நீங்கள்
கீழ்க்காணும் பொருள்கள் பற்றிய அறிமுகத்தையும்
விளக்கத்தையும் பெறலாம்.

மொழிபெயர்ப்பு - தருமொழி - பெறுமொழி -
வழிமொழி - மொழிபெயர்ப்பாளர் பற்றி அறிந்து
கொள்ளலாம்.
அறிவியல் மொழிபெயர்ப்பு - அதன்சிறப்புகள் - அதில்
பின்பற்ற வேண்டியன - தள்ள வேண்டியன - எளிமை -
சுருக்கம் பற்றி அறியலாம்.
கலைச்சொல்லாக்கம் - ஒலிபெயர்ப்பு - குறியீடுகள்
பயன்படுத்துதல் பற்றி அறியலாம்.
கலைத்துறை மொழிபெயர்ப்பு - கவிதை - புனைகதை -
கட்டுரை - சொற்பொழிவு - விளம்பரம் - சமய வரலாற்று
மொழிபெயர்ப்பு எனக் கலைத்துறை மொழிபெயர்ப்பு
எப்படி அமைய வேண்டும் என்பது பற்றி அறியலாம்.
சிறந்த மொழிபெயர்ப்பு எப்படி அமையும் என்று
இந்தப்பாடம் தெளிவுபடுத்துவதை அறியலாம்.