2.0 பாடமுன்னுரை |
தமிழகத்தில் ஆழ்வார்களும், நாயன்மார்களும் தோன்றிப் பக்தி நெறியைப் பரப்பிய காலமே பக்தி இயக்கக் காலம் எனப்படுகிறது. வரலாற்றாசிரியர்களை மட்டுமன்றித் தமிழ் அறிஞர்களையும் ஈர்த்த காலப் பகுதி இதுவாகும். இக்காலத்தில் தோன்றிய தேவாரம், திவ்வியப் பிரபந்தம் போன்ற பக்திப் பனுவல்கள் - அகம், புறம் ஆகிய முன்னைத் தமிழ் மரபுகளை உள்வாங்கிக் கொண்ட தனிச்சிறப்புடையவை. பக்தி இயக்கத்தைத் தமிழ்க் காப்பு இயக்கமாக மாற்றிய பெருமை மிக்கவை. எனவே, களப்பிரருக்குப் பின் பக்தி இயக்கம் என்னும் இப்பாடத்தில், பக்தி இயக்கத்தின் சிறப்புகள் பன்முக நோக்கில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. |