P2022 வைணவம் - சமயமும் தத்துவமும்

பாட ஆசிரியரைப் பற்றி

முனைவர். ம.பெ. சீனிவாசன்

கல்வித் தகுதி : எம்.ஏ., எம்.ஃபில்., பிஎச்.டி., பொருளியல்
பட்டப்படிப்புக்குப் பின்னர், மதுரைத்
தியாகராசர் கல்லூரியில் (1965-67),
டாக்டர் அ. சிதம்பரநாதச் செட்டியார்,
ஒளவை.     சு. துரைசாமிப்பிள்ளை,
அ. கி. பரந்தாமனார்,
மொ.அ. துரையரங்கனார் ஆகியோரிடம்
தமிழ் (எம்.ஏ.) பயின்றவர்.,
பணி : 34 ஆண்டுகள் கல்லூரி நிலையில் தமிழ்ப்
பேராசிரியர் பணி. (1968-71) சென்னை
து.கோ. வைஷ்ணவக் கல்லூரி; 1971-2002
சிவகங்கை     மன்னர் துரைசிங்கம்
அரசுக்கல்லூரி;
சிறப்புத் தகுதிகள்: ஆழ்வார்களின் அருளிச்செயல்களிலும்
உரைகளிலும் ஆழ்ந்த பயிற்சி, அத்துறை
சார்ந்த ஆய்வுக்காக 'முனைவர்' பட்டம்
(1993, மதுரைக் காமராசர் பல்கலைக்
கழகம்), 'ஆய்வுக்குப் படிச்சந்தம்'
(முன்னுதாரணம்) என்று அறிஞர்கள்
பாராட்டும் நூல்களைப் படைத்தவர்.
சாகித்திய     அக்காதெமி, அன்னம்,
மணிவாசகர் நூலகம்,    மெய்யப்பன்
தமிழாய்வகம் போன்ற புகழ்மிக்க
நிறுவனங்களால்     வெளியிடப்பட்ட
நூல்கள் அவை.
வெளியான
நூல்கள் :
1. திருமங்கையாழ்வார் மடல்கள் (1987)
மறுபதிப்பு, மணிவாசகர் நூலகம் (2002)
2. வைணவ    இலக்கிய     வகைகள்
(திவ்வியப் பிரபந்த ஆய்வு) 1993.
('திவ்வியப் பிரபந்த இலக்கிய வகைகள்'
என்னும்     பெயரில்     மறுபதிப்பு,
மெய்யப்பன் - தமிழாய்வகம், 2001)
3. பெரியாழ்வார், சாகித்திய அக்காதெமி
வெளியீடு, 1999.
4. குலசேகராழ்வார், சாகித்திய
அக்காதெமி வெளியீடு, 2003

5. ஒருநாள் - ஒருபாசுரம், மணிவாசகர்
நூலக வெளியீடு 2003.

பிற : பல்கலைக் கழகங்களில் அறக்கட்டளைப்
பொழிவுகள்;     வானொலி, கம்பன்
கழகம், தமிழ்ச்சங்கம், அருளிச் செயல்
ஆய்வகம், திவ்வியப் பிரபந்த அரங்குகள்,
அருள்நெறி     மன்றம் போன்ற
அமைப்புகளில் ஆய்வுரைகள், மலர்களில்
- பல்கலைக் கழகக் கருத்தரங்குகளில்
கட்டுரைகள்.     வைணவ சமயப்
பெரியார்களைப் பற்றிய (Aconyar)
கட்டுரைகள் (Descriptive articles) in
The Encyclopaedia of Hinduism and
Indic Religions, a Project of IHRF,
Columbia, U.S.A.

முன்