| 1.5 படைப்பாளியின் தகுதிகள் |
பண்டைய காலத்தில் கிரேக்கர்கள் படைப்பாளிகளைத்
தேவதைகள் எழுதத் தூண்டுவதாக
நம்பிக்கை கொண்டிருந்தனர். ஒவ்வொரு இலக்கியப் பிரிவுக்கும் ஒரு தேவதை
என்று ஒன்பது
தேவதைகள் இருப்பதாக நம்பினார்கள். நம் நாட்டிலும் கல்விக்காக
ஒரு பெண் கடவுள் (சரசுவதி) இருப்பதையும், அதற்கான விழா
ஆண்டுதோறும் நடைபெறுவதையும் நாம் அறிவோம்.
உலகம் முழுதும் பெரும்
படைப்பாளிகள் கடவுள் தான்
தன்னை எழுதத் தூண்டுவதாக நம்பினார்கள். மில்டன், பாரதி
போன்றோர் கடவுளே தங்களை எழுத
வைத்ததாக
நம்பியுள்ளனர். இருப்பினும் படைப்பாளிகளுக்கு என்று சில
தகுதிகள் உள்ளன. அந்தத் தகுதிகளை முழுமையாகக்
கொண்டவனே ஒரு படைப்பாளியாக வெளிப்பட முடியும். படைப்பாளியின் தகுதிகள் :
| 1) |
படைப்பாளிகள் எந்த ஒன்றையும்
கூர்ந்து நோக்கும்
அற்றல் உள்ளவர்களாக இருகக வேண்டும். |
| |
|
| 2) |
எந்த ஒன்றையும் ஆர்வத்தோடு
நோக்கும் தன்மை
கொண்டிருக்க வேண்டும். |
| |
|
| 3) |
படைப்பாளர்கள் மிகுந்த அனுபவங்கள்
பெற்றவராக
இருக்க வேண்டும். |
| |
|
| 4) |
தமிழில் தலைசிறந்த
இலக்கியத் திறனாய்வாளர்
அ.சா.ஞானசம்பந்தம் அவர்கள், "வாழ்ந்து காட்டும்
வாழ்க்கையைச் சொற்களால் கூறுவதே இலக்கியம்"
என்று கூறுவார். அந்த முறையில் ஒரு படைப்பாளி
வாழ்வைப் பற்றித் தான் முழுதும் உணர்ந்து, தான்
உணர்ந்ததைச் சொற்களால் படைக்கும்
திறன்
கொண்டிருக்க வேண்டும். |
| |
|
| 5) |
படைப்பாளி நல்ல சமூக அக்கறை உள்ள
மனிதனாக
இருத்தல் மிகவும் இன்றியமையாதது ஆகும். |
|