தற்கால நாடகங்கள்
என்பது கி.பி.1870-லிருந்து
தொடங்குவதாகக் கொள்ளலாம். தொன்மை நாடகப்
போக்குகளிலிருந்து ஒரு மாற்றம் பெற்ற நிலையை நாடகம்
அக்காலக்கட்டத்தில் தான் அடைந்தது. மேலும் பல நாடக
மேதைகளும் தமிழகத்தில் தோன்றி நாடகப் போக்குகளை
மாற்றியமைத்தனர். 19ஆம் நூற்றாண்டில் பம்பாயில் தோன்றி
இந்தியா முழுவதும் நாடகம் நடத்திய பார்சி நாடகக்
குழுக்களின் தாக்கமும், உரைநடை வளர்ச்சி மேல்நாட்டு
நாடகப் போக்கின் தாக்கம் ஆகியனவும் தமிழ் நாடகத்தைப்
புதிய வடிவிற்குக் கொண்டு வந்தன.
|