கட்டுமானம்
என்ற சொல் பொதுவாகக் கட்டடத் துறையில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது.
கணிப்பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிக்குப் பிறகு,
கணிப்பொறிக் கட்டுமானம் (Computer Architecture), நுண்செயலிக் கட்டுமானம்
(Microprocessor Architecture) எனப் பருப்பொருட்களுக்கு மட்டுமின்றி, நிரல்
கட்டுமானம் (Program Architecture), ஜாவா கட்டுமானம் (Java Architecture),
.நெட் கட்டுமானம் (.NET Architecture), தகவல் கட்டுமானம் (Information Architecture)
எனக் கருத்துருக்களுக்கும் இன்றைக்குப் பயன்படுத்தப் படுகிறது. தகவல் கட்டுமானம்
என்ற சொல்தொடரை முதன்முதலாகப் பயன்படுத்தியவர் யார், அவர் எப்பொருளில் பயன்படுத்தினார்
என்பதையும் தகவல் கட்டுமானி என்பவர் யார், அவர் பொறுப்புகள் யவை என்பதையும்
இப்பாடப் பிரிவில் காண்போம்.
ரிச்சர்டு
சவுல் உர்மன் (Richard Saul Wurman) என்பார் ஒரு கட்டடக்கலை நிபுணர். சிறந்த
வரைகலை வல்லுநராகவும் திகழ்ந்தவர். கட்டடக்கலை, போக்குவரத்து மற்றும் நகர்ப்புற
மேம்பாடு தொடர்பான பல்வேறு துறைகள்பற்றி நூல்கள் வெளியீட்டுள்ளார். அவற்றில்
அனைவருக்கும் புரியும் வகையில் வரைகலை வடிவில் தகவல்களைத் தொகுத்து வழங்கியுள்ளார்.
ஒரு கட்டடக்கலை வல்லுநராயினும், பொதுவாகத் தகவல்களைத் திரட்டி அவற்றை ஒழுங்கமைத்து
எளிதாகப் பொருளுணரும் வகையில் வழங்கும் நுட்பங்களில் ஆர்வம் காட்டத் தொடங்கினார்.
அவைபற்றி நூல்கள் வெளியிட்டார். 1975-ஆண்டில் தம் நூல் ஒன்றில் தகவல் கட்டுமானம்
(Information Architecture), தகவல் கட்டுமானி (Information Architect) ஆகிய
சொல்தொடர்¢களைப் பயன்படுத்தினார். இருப்பினும் இணையத்தின் வருகைக்குப் பிறகே
அச்சொற்கள் மிகப் பரவலாகப் புழக்கத்துக்கு வந்தன.
1996-இல் லூயிஸ் ரோசன்ஃபெல்டு
(Louis Rosenfeld), பீட்டர் மார்வல்லி (Peter Morville) என்னும் இரு நூலக
அறிவியலாளர்கள் மிகப்பெரிய வலையகங்களையும் (Websites) அக இணையங்களையும் (Intranets)
வரையறுப்பதற்கு இச்சொற்களைப் பயன்படுத்தலாயினர். உர்மனுக்குப் பிறகு இக்கருத்துருவை
வளர்த்தெடுத்த பெருமை இவ்விருவரையே சாரும். தகவல் கட்டுமானம் என்னும் சொல்தொடர்
வலையகங் களின் தகவல் ஒழுங்கமைப்பு தொடர்பாகவே இன்றைக்குப் பெருமளவு பயன்படுகின்ற
போதிலும் தகவல்களைத் தொகுத்து வழங்குகின்ற எத்துறைக்கும் பொருத்தமான சொல்லாகவே
விளங்குகிறது.
2.1.2
கட்டடக் கட்டுமானமும் தகவல் கட்டுமானமும்
பல
ஏக்கரில் பரந்த வெற்று நிலம் கிடக்கிறது. ஒருபுறம் செங்கற்களும் சிமென்டும்
அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இன்னொருபுறம் இரும்புக் கம்பங்களும் மரச்சட்டங்களும்
மற்றும் பல கட்டடச் சாமான்களும் கொட்டிக் கிடக்கின்றன. அப்படியே மக்கள் குடிவந்துவிட
முடியாது. கட்டட வல்லுநர் ஒவ்வொரு வீட்டையும் குடியிருப்பதற்கு உகந்த வகையில்
வடிவமைப்பதுடன் ஒட்டுமொத்தக் குடியிருப்பையும் மிகுந்த கவனத்துடன் திட்டமிட்டுக்
கட்டமைக்க வேண்டும். குடியிருப்பின் நுழைவாயில் தொடங்கி, பாதைகள், வாகனம்
நிறுத்துமிடம், பூங்கா, குழந்தைகள் விளையாட்டிடம் போன்ற அனைத்தும் எவரும்
இடையூறின்றிப் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு வீட்டுக்கும்
வெளிச்சமும் காற்றும் தாராளமாய்க் கிடைக்க வேண்டும். சுருக்கமாகக் கூறுவதெனில்
குடியிருக்கும் மக்களின் வசதிக்கும் விருப்பத்துக்கும் ஏற்ப குடியிருப்பின்
கட்டுமானம் வடிவமைக்கப்பட வேண்டும்.
தகவல் கட்டுமானமும் இப்படிப்பட்டதுதான். தகவல்கள் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன.
அவை நுகர்வோருக்கு முழுமையாகச் சென்று சேர வேண்டுமெனில் அவற்றை முறைப்படி
ஒழுங்கமைத்து சிறப்பாக வடிவமைத்து வழங்க வேண்டும். சிக்கலான தகவல்களும் மிகத்
தெளிவான முறையில் வழங்கப்பட வேண்டும். தகவல் அறிய விரும்புவோர், பிறர் எவருடைய
உதவியுமின்றித் தாமே தேடி அறிந்துகொள்ளும் வகையில் தொகுப்பின் வடிவாக்கம்
அமைய வேண்டும். ஆக, அனைத்து வகையிலும் தகவல் கட்டுமானம் என்பது கட்டடக் கட்டுமானத்தைப்
பெரிதும் ஒத்துள்ளது.
2.1.3
தகவல் கட்டுமானி (Information Architect)
தகவலைச்
சேகரித்து, ஒழுங்கமைத்து வழங்குவதில் உள்ள சிக்கல்கள், குடியருப்பவரின் தேவைகளை
நிறைவு செய்வதற்கு ஏற்ப ஒரு கட்டடத்தை வடிவமைப்பதில் ஒரு கட்டடக் கட்டுமானி
எதிர்கொள்ளும் சிக்கல்களைப் பெரிதும் ஒத்துள்ளன என உர்மன் கருதினார். ஒரு
கட்டடக் கட்டுமானி.
ஆவணத்தைத்
தட்டச்சிட்டு முடித்தபின், பட்டிப் பட்டையில் File என்ற தேர்வின்மீது சொடுக்க,
அதன் கிளைப்பட்டி கீழ்விரியும். அதில் Save As... என்னும் கட்டளையைத் தேர்ந்தெடுக்க
வேண்டும். கோப்புச் சேமிப்புச் சாளரம் விரியும். Save in என்னும் கட்டத்தில்
My Documents எனவும், Save as type என்னும் கட்டத்தில் Word Document எனவும்
இருப்பதை உறுதி செய்து கொள்ளவும். File name என்பதில் ஆவணத்தின் முதல்வரி
காட்சியளிக்கும். அதுவே பொருத்தமான பெயர் எனில் அப்படியே விட்டுவிடலாம்.
அல்லது வேறு பொருத்தமான பெயரை அவ்விடத்தில் உள்ளிட்டு, Save என்னும் பொத்தான்மீது
சொடுக்க வேண்டும். இப்போது நிலைவட்டில் ஆவணம் My Documents என்னும் கோப்புறையில்
நிரந்தரமாய்ச் சேமிக்கப்பட்டுவிடும்.
1. |
குடியிருப்போரின்
தேவைகள் பற்றிய தகவல்களைத் திரட்டுகிறார். |
2. |
தேவைகளை
அவற்றின் தன்மைகளுக்கு ஏற்ப சீராக வகைப்படுத்தி ஒழுங்கமைக்கிறார். |
3. |
குடியிருப்போரின்
தேவைகளை நிறைவேற்றும் வகையில் கட்டடத்தை வடிவமைக்கிறார். |
அதேபோல்
எந்தத் துறையிலும் தகவல்களைத் திரட்டி, வகைப்படுத்தி, ஒழுங்கமைத்து, வழங்கும்
பணியும் கட்டுமானப் பணி என்பதே உர்மன் அவர்களின் கருத்தாகும். இப்பணியில்
ஈடுபடுபவர் ‘தகவல் கட்டுமானி’ ஆவார். தகவல் கட்டுமானி என்பவர்,.