இந்த நூற்றாண்டைக் கணினி நூற்றாண்டு என்று அழைப்பர். இன்று, கணினியின் செல்வாக்கு எல்லாத் துறைகளிலும் உள்ளது. எல்லா நிலையிலும் - இல்லம் வரையிலும் கணினியின் செயல்பாடும், பயன்பாடும் மிகுந்துள்ளன. கணினி எவ்வாறு தோன்றி வளர்ந்தது - வளர்ந்து வருகிறது; கணினியின் வகைகள், அதன் முறைமை, கணினியில் பயன்படுத்தப்படும் சாதனங்கள், கணினியின் உறுப்புகள் முதலியவைப் பற்றி இப்பாடம் தொகுத்துக் கூறுகிறது. |