|
-
இப்பாடத்தைப் படித்ததின்
மூலம் கணினி தோன்றி வளர்ந்த வரலாற்றை அறிந்தீர்கள். கணினியின் வகைகள்
பற்றிக் குறிப்பாகச் சொந்தக் கணினிகளைப் பற்றிய செய்திகளையும் தெரிந்து
கொண்டீர்கள். உள்ளீட்டகம், வெளியீட்டகம் ஆகிய கணினி முறைமையைப் பற்றியும்
அறிந்தீர்கள்.
-
மேலும், விசைப்பலகை என்றால் என்ன, சுட்டி என்றால்
என்ன, ஒளிப்பேனா என்றால் என்ன, வருடி என்றால் என்ன முதலிய கணினி உள்ளீட்டுச்
சாதனங்களைப் பற்றியும் தெரிந்து கொண்டீர்கள்.
-
கணினி வெளியீட்டுச் சாதனங்கள் பற்றியும், கணினியின்
முறைமைக் கூறுகள் பற்றியும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. கணினியின்
சேமிப்புச் சாதனங்களைப் பற்றியும் அறிந்து கொண்டிருப்பீர்கள்.
தன் மதிப்பீடு : வினாக்கள் - I |
1. |
கணினியின் உறுப்புகளிலேயே உயிர் நாடியான உறுப்பு எது?.
|
2. |
கணினி செயல்படுவதற்குரிய
முக்கியமான உறுப்புகள் எங்கே பொருத்தப் பட்டுள்ளன? |
3. |
கணினியின்
மின்னணுப் பாகங்கள் இயங்க எது தேவை? |
4. |
தகவல்களைக்
கணினியில் சேமித்து வைக்க எவை பயன்படுகின்றன? |
5. |
குறுவட்டு
(C.D) என்றால் என்ன? |
|