5.5

தொகுப்புரை

 
  • நாம் இதுவரை இந்தப் பாடத்தில் மென்பொருள் என்றால் என்ன என்பது பற்றிய விளக்கத்தைப் பார்த்தோம். கணினியில் கட்டாயம் இருக்க வேண்டிய மென்பொருள், விரும்பினால் நிறுவிக் கொள்ளும் மென்பொருள் - எவையெவை என்பதைப் பார்த்தோம்.
  • மென்பொருள்களை முறைமை மென்பொருள், பயன்பாட்டு மென்பொருள், கணினிமொழி மென்பொருள் என மூவகைப்படுத்தி, எடுத்துக்காட்டான மென்பொருள் தொகுப்புகள் பற்றியும் அறிந்து கொண்டோம்.
  • முறைமை மென்பொருள்களில் முக்கியமானதாய் விளங்கும் இயக்க முறைமை பற்றியும், அதன் மேலாண்மைப் பணிகள் பற்றியும் படித்தோம். இயக்க முறைமையில் உள்ள ஒற்றைப் பயனர், பல்பயினர், பல்பணி, பிணையம், நுகர்வி/வழங்கி என பலவகைப்பட்ட இயக்க முறைகள் பற்றிக் கற்றுக் கொண்டோம். மேலும், வட்டுகளைப் பராமரிக்க உதவுகள் சில முறைமைப் பயன்கூறுகள் பற்றியும் அறிந்து கொண்டோம்.
  • வீடு, அலுவலகம், வணிகம், இணையம் ஆகியவற்றில் பயன்படும் பயன்பாட்டு மென்பொருள்கள் பற்றி அறிந்து கொண்டோம். ஊடக இயக்கிகள், குரல்பதிவிகள், தூரிகைகள், விளையாட்டுகள், உரைத் தொகுப்பிகள், கணிப்பி போன்ற வீட்டுப் பயன்பாட்டு மென்பொருள்களைப் பற்றித் தெரிந்து கொண்டோம். அலுவலகப் பயன்பாடுகளான, சொல் செயலி, விரிதாள், தரவுத் தளம், முன்வைப்பி ஆகியன பற்றிப் படித்தோம். கணினிப் பதிப்பகம், ஒளிப்படத் திருத்தி, வரைகலை/அசைவூட்டம் போன்ற வணிகப் பயன்பாடுகள் பற்றியும் அறிந்து கொண்டோம். இணையத்தில் வலம்வரும் தேடுபொறிகள், மின்னஞ்சல், இணைய விளையாட்டுகள் போன்ற பயன்பாட்டு மென்பொருள்கள் பற்றியும் விளக்கம் பெற்றோம்.
  • கணினி மொழி மென்பொருள்களைக் கற்றறிந்தோம். அடிநிலை மொழி, உயர்நிலை மொழிகளின் வேறுபாடு அறிந்தோம். சில்லுமொழி பெயர்ப்பி, ஆணை பெயர்ப்பி, நிரல் பெயர்ப்பி ஆகிய மொழிபெயர்ப்பு மென்பொருள்கள் பற்றித் தெரிந்து கொண்டோம். உயர்நிலை மொழிகளின் வகைப்பாடுகளையும், கட்டமைப்பிலா மொழி, கட்டமைப்பு மொழி, பொருள்நோககு நிரலாக்க மொழி, பொருள்கூறு நோக்கு நிரலாக்க மொழி ஆகியவற்றை எடுத்துக்காட்டுகளுடன் படித்தறிந்தோம்.
  • உரை நிரல் மொழிகள், நான்காம் தலைமுறை மொழிகள் என்கிற வகைப்பாடுகளையும் அவற்றின் பயன்பாட்டையும் எடுத்துக்காட்டுகளுடன் பார்த்தோம்.
  • ஐடிஇ என அறியப்படும் ஒருங்கிணைந்த உருவாக்கச் சூழல் வழங்குகின்ற வசதிகளை அறிந்து கொண்டோம்.
தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1.
பயன்பாட்டு மென்பொருள் என்றால் என்ன?
2.
அலுவலகப் பயன்பாட்டு மென்பொருள்கள் சிலவற்றைக் குறிப்பிடுக.
3.
பகுதிநேரத் தொழில்செய்ய உதவும் மென்பொருள்கள் எவை?
4.
தேடுபொறி என்பது என்ன? அதன் பயன் யாது?

5.

‘கணினி மொழி மென்பொருள்கள்’ என எவற்றைக் கூறுகிறோம்?

6.

ஆணைபெயர்ப்பிக்கும் நிரல்பெயர்ப்பிக்கும் உள்ள வேறுபாடு யாது?
7.
உயர்நிலை மொழிகள் வகைப்பாடுகள் யாவை?
8.
சி-மொழியின் சிறப்புத் தன்மைகளைப் பட்டியலிடுக.
9.
நான்காம் தலைமுறை மொழிகள் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளன?
10.
‘ஒருங்கிணைந்த உருவாக்கச் சூழல்’ என்பது என்ன?