பாடம் - 2
P20322 சொல்செயலி
(Word Processor)

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

இந்தப் பாடம் சொல்செயலி மென்பொருளை அறிமுகப்படுத்தி, மைக்ரோசாஃப்ட் வேர்டு என்னும் சொல்செயலியில் ஆவணங்களை உருவாக்கிக் கையாளும் வழிமுறைகளையும், சொற்பிழை, இலக்கணப்பிழை கண்டறிந்து களைதல் உட்பட அம்மென்பொருள் வழங்கும் பல்வேறு வசதிகளையும் எடுத்துக் கூறி அவற்றுக்கான செயல்முறைகளையும் விளக்கிக் கூறுகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும்போது நீங்கள் கீழ்க்காணும் கருத்துகளில் தெளிவு பெறுவீர்கள்:

  • சொல்செயலி மென்பொருள் பற்றிய அறிமுகம்

  • ஆவண உருவாக்கத்திற்கான கருவிகள்

  • ஆவணங்களை உருவாக்கிச் சேமித்து அச்சிடும் வழிமுறைகள்

  • ஆவணத்தைப் பார்வையிடும் காட்சிமுறைகள்

  • உரை, பத்தி, பக்கங்களை வடிவமைத்தல்

  • சொற்பிழை, இலக்கணப்பிழை கண்டறிந்து களைதல்

  • தானியங்கு பிழைதிருத்தம்

  • ஆவணங்களில் படங்கள், அட்டவணைகளைச் சேர்த்தல்

  • ஒரே கடிதத்தைத் தனித்தனி முகவரியிட்டுச் சுற்றறிக்கை தயாரித்தல்

  • ஆவணங்களைக் கடவுச்சொல் மூலம் பாதுகாத்தல்

பாட அமைப்பு