பாடம் - 3

P20323 விரிதாள்
(Spreadsheet)

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

இந்தப் பாடம் விரிதாள் மென்பொருளை அறிமுகப்படுத்தி, மைக்ரோசாஃப்ட் எக்செல் என்னும் விரிதாளில் பணித்தாள்களைக் கையாளும் வழிமுறை களையும், தானியங்கிக் கணக்கீடுகள், வரைபடங்கள், அட்டவணைச் செயல்பாடுகள் உட்பட அம்மென்பொருள் வழங்கும் பல்வேறு வசதிகளையும் எடுத்துக் கூறி அவற்றுக்கான செயல்முறைகளையும் விளக்குகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும்போது நீங்கள் கீழ்க்காணும் கருத்துகளில் தெளிவு பெறுவீர்கள்:

  • விரிதாள் மென்பொருள் பற்றிய அறிமுகம்

  • பணிப்புத்தகம், பணித்தாள் பற்றிய விளக்கம்.

  • பணித்தாளில் தரவுகளை உள்ளிட்டு வடிவமைத்தல்.

  • வாய்பாடு, செயல்கூறுகள் வழங்கும் தானியங்கிக் கணக்கீடுகள்.

  • வரைபடங்கள் உருவாக்கி வடிவமைக்கும் முறைகள்.

  • வரைபட வகைகளும் வரைபட உறுப்புகளும்.

  • அட்டவணைகளில் வரிசையாக்கமும், வடிகட்டிகளும்

  • ஆய்ந்தறி அட்டவணைகள்.

பாட அமைப்பு