பாடம் - 1

P20331 கணிப்பொறிகளின் பிணைய அமைப்பு
(Networking Computer Systems)

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

   இந்தப் பாடம் கணிப்பொறிப் பிணையத்தின் அடிப்படைகளை எடுத்துக் கூறி, கணிப்பொறிப் பிணையம் அமைப்பதற்குத் தேவையான ஊடகம், வன்பொருள்கள், மென்பொருள்கள் ஆகியவற்றை விளக்குகிறது.

 

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும்போது நீங்கள் கீழ்க்காணும் கருத்துகளில் தெளிவு பெறுவீர்கள்:

  • கணிப்பொறிப் பிணையம்: என்ன? எதற்காக? எவ்வாறு?
  • பிணையத் தகவல் பரிமாற்ற ஊடகங்களான செப்புக் கம்பிகள், ஒளியிழை வடங்கள் மற்றும் கம்பியில்லா ஊடகங்கள்
  • கணிப்பொறிகளைப் பிணைக்கும், பிணையங்களை விரிவாக்கும், பிணையங்களை இணைக்கும் வன்பொருள்கள்
  • பிணைய இயக்க முறைமைகள்
  • தகவல் தொடர்பு நெறிமுறைகள்
  • வழங்கி, நுகர்வி மென்பொருள்கள்

பாட அமைப்பு