பாடம் 3

P20343 :மின்னணுப் பணப் பரிமாற்றம்
(Electronic Fund Transfer)

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    இந்தப் பாடம் மின்னணுப் பணப் பரிமாற்றம் மற்றும் பணம்செலுத்து அட்டைகளின் வகைகள், பயன்பாடுகள், நிறை-குறைகளை எடுத்துக் கூறி, அமெரிக்க மின்னணுப் பணப் பரிமாற்றச் சட்டத்தைப் பற்றியும், இந்தியாவில் மின்னணுப் பணப் பரிமாற்ற வளர்ச்சியையும் விளக்குகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும்போது நீங்கள் கீழ்க்காணும் கருத்துகளில் தெளிவு பெறுவீர்கள்:

மின்னணுப் பணப் பரிமாற்ற வகைகள்.
பணம்செலுத்து நுழைவாயில்கள் செயல்படும் முறை
மின்னணுப் பணப் பரிமாற்றத்தின் நிறை-குறைகள்
பணம்செலுத்து அட்டைகளின் வகைகள், பயன்பாடுகள், நிறை-குறைகள்
அமெரிக்க இஎஃப்டீ சட்டம் வழங்கும் பாதுகாப்பும், உரிமைகளும்
இஎஃப்டீ வளர்ச்சிக்கு இந்திய ரிசர்வ் வங்கி எடுத்த முன்முயற்சிகள்
இந்தியாவில் தேசிய மின்னணுப் பணப் பரிமாற்ற முறைமை
இந்தியாவில் மின்னணுப் பணப் பரிமாற்றத்தின் இன்றைய நிலை