புதுக்கவிதை ஆசிரியர் அறிமுகம்
Introduction to author

வல்லிக்கண்ணன்

     திருநெல்வேலி மாவட்டம் இராசவல்லிபுரம் என்னும் ஊரில் 12-11-1920 அன்று
பிறந்தார். இவர் சிறுகதை, புதினங்கள், கட்டுரைகள், திறனாய்வுகள் எனப் பல நூல்கள்
எழுதியுள்ளார். இவர் எழுதிய புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற ஆய்வு நூல்
1978ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளது.

அமுதபாரதி

     இவர் திருவள்ளூர் அருகில் உள்ள மாமண்டூர் என்னும் சிற்றூரில் 31-8-1939 அன்று
பிறந்தார். தாயார் வள்ளியம்மாள்
; தந்தையார் மா.குமாரசாமி. இவர் தமிழ்நாடு அரசின்
பாவேந்தர் பாரதிதாசன் விருதும், சென்னை கம்பன் கழக வித்தகர் விருதும்
பெற்றுள்ளார். தமிழ் இலக்கிய உலகில் முதல் ஐக்கூ நூல் எழுதிய பெருமைக்குரியவர்.
ஐக்கூ என்பது புதுக்கவிதை வடிவங்களில் ஒன்றாகும்.

     இவர் எழுதிய முதல் ஐக்கூ நூலாகிய புள்ளிப் பூக்கள் என்னும் நூலில் இக்கவிதை
இடம்பெற்றுள்ளது.