1 |
ஒரு சொல்லோடு மற்றொரு சொல் சேருவதை இலக்கணத்தில் புணர்ச்சி
என்று வழங்குவர். |
|
2 |
வாழை மரம் - இத்தொடரில் ‘வாழை’ என்று வருவது வருமொழி. |
|
3 |
வாழைப்பழம் - இத்தொடர்
விகாரப்புணர்ச்சி. |
|
4 |
பல + பல = பல பல எனவும் பற்பல எனவும் புணரும். |
|
5 |
சில + மலர் = சின்மலர் என்று வருவது இயல்பு புணர்ச்சி. |
|
6 |
வடக்கு + வேங்கடம் = வடவேங்கடம் என்று வருவது திசைப்பெயர்ப்
புணர்ச்சி. |
|
7 |
மணி + அடித்தது = மணி அடித்தது என்று எழுதுவது உடம்படுமெய்ப்
புணர்ச்சி. |
|
8 |
தமிழ் + ஆசிரியர் = தமிழாசிரியர் என்று புணவருவதற்கான புணர்ச்சி விதி, ‘உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே’. |
|
9 |
உம்மைத் தொகையில் வல்லினம் மிகும். |
|
10 |
பண்புத் தொகையில் வல்லினம் மிகும். |
|