அரும்பத விளக்க முதலியன

சொல் ப. எண்
கஃறு - ஒருவகை நிறம் 71
கடப்பாடு - முறைமை 69
கடா - வினா 11
கடான் - வழக்கிறந்தசொல் 99
கண்கூடு - பிரத்தியட்சம் (காட்சி) 116
கண்ணழித்தல் - பதம்பிரித்துப் பொருள்கூறல் 12
கண்ணுதல் - கருதுதல் 199
கண்விரி - அலரி 221
கப்பி - அக்காலத் தேயவழக்குப்பெயர் 221
கபிலபரணர் - கபிலனும் பரணனும், இது னகரவீறு.
ஈழ வக்கத்தி முதலியன னகர வீற்றுக்கும் ரகர
வீற்றுக்கும் பொது. ஈழவன்கத்தி ஈழவர் கத்தி
என்று விரிக்கலாம் என்றபடி
154
கம - நிறைவு 163
கருவித்திரிபுகள் - கருவித்திரிபுப் புணர்ச்சிகள் 148
கரைதல் - கூறுதல்
கலம் - ஓரளவுப் பெயர் 138
கலி - கலிப்பா 45
கலை - ஆண்மான் 242
கழற்பெய்குடம் - கழற்காய் இட்டகுடம் 3