முகப்பு தொடக்கம்


அநுபந்தம்
அளபெடை
 
அளபெடை  -  அளபெடுப்பது ; என்றது அளபெடுத்தலை யுடையதாய எழுத்தை.  அளபெடுக்குங்கால் நெட்டெழுத்தேழும் அளபெடுக்குமென்றும், அவை  இவ்வளவுமாத்திரை  நீண்டனவென்பதை  அவ்வவற்றிற் கினமாகிய குற்றெழுத்துக்கள் காட்டி அவற்றின்  பின்னே  நிற்குமென்றும்  நன்னூலார் கூறுவர்.

தொல்காப்பிய உரையாசிரியர்களாய இளம்பூரணர், நச்சினார்க்கினியர் என்னு மிருவரும் நெடிலுங் குறிலுஞ் சேர்ந்து நின்று அளபெடுக்குமென்னும் பொருள்பட,

"நீட்டம் வேண்டின் அவ்வள புடைய
கூட்டி யெழூஉத லென்மனார் புலவர்"


என்னுஞ்     சூத்திரத்திற்கு,    முறையே     "நீண்டமாத்திரையையுடைய அளபெடையெழுத்துப்     பெறவேண்டின்,     மேற்கூறிய      ஒரளபும் இரண்டளபுமுடைய குறிலையும் நெடிலையும் பிளவு படாமற் கூட்டியெழூஉக என்று  கூறுவர்  ஆசிரியர்"  என்றும்,  "வழக்கிடத்துஞ்   செய்யுளிடத்தும் ஓசையும் பொருளும் பெறுதல்காரணமாக இரண்டுமாத்திரைபெற்ற வெழுத்து அம்மாத்திரையின் மிக்கொலித்தலை விரும்புவாராயின்,   தாங்கருதிய மாத்திரையைத்  தருதற்குரிய  எழுத்துக்களைக்கூட்டி  அம்  மாத்திரையை எழுப்புக ; என்று கூறுவா ராசிரியர்"  என்றுங்  கூறுவர்.  இவ்விருகூற்றுள் எக்கூற்றுப் பொருத்த முடைத்தென்பதே யாம் ஈண்டு ஆராய்வது.

அளபெடையென்பது     குறில்     நெடில்      என்பது     போல அளபெடுத்தலையுடையதாய   ஓரெழுத்தையே   யுணர்த்தும்.   ஆதலின், ஒரெழுத்தே தன்னளபினும் எழுந்தொலிக்கு மென்பது துணிபாம். ஏனெனில், இரண்டெழுத்துக்   கூடி    ஒலிக்குங்கால்    எவ்வளவொலிக்குமென்றும், எவ்வாறொலிக்கு மென்றும் தெரிய வாராமையின். அன்றியும்,  இரண்டுகூடி


முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்