சூத்திரவுரையில், "அளபிறந்தன வென்றது நெட்டெழுத்து அளபெடையாயும்,
அளபெடை மூன்று மாத்திரையினிறந்தும் சேய்மைக்குத் தக்கவாறு
நீண்டிசைக்கு மென்றவாறு" என்பதனா லறிந்துகொள்க.
|
இதுகாறுங் கூறியவாற்றானே அளபெடுக்குங்கால் நெடிலுங் குறிலுங்
கூடிநின்று அளபெடுக்குமென்றல் பொருந்தாதென்பதூஉம் நெட்டெழுத்தேழே அளபெடுக்கு மென்பதூஉம், குற்றெழுத்துக்கள்
குறியாய்வரும் என்பதூஉம் துணிபாதல் காண்க.
|
["செந்தமிழ்" தொகுதி - 26, பகுதி - 7] |
|