கடவுள் வணக்கம்
|
| “நித்தியமாய் நிர்மலமாய் நிட்களமாய் நிராமயமாய் |
| நிறைவாய் நீங்காச் |
| சுத்தமுமாய்த் தூரமுமாய்ச் சமீபமுமாய்த் துரியநிறை |
| சுடராய் எல்லாம் |
| வைத்திருந்த தாரகமாய் ஆனந்த மயமாகி |
| மனவாக் கெட்டாச் |
| சித்துருவாய் நின்றவொன்றைச் சுகாரம்பப் பெருவெளியைச் |
| சிந்தை செய்வாம்.” |
| |
| |
- தாயுமானசுவாமிகள். |