முகப்பு

தொடக்கம்


x

பெயர்க் காரணம் :

பொருள்   இடம் காலம் சினை குணம்  தொழில்  ஆகியவற்றுக்கு
வழங்கற்பாடு பற்றி இடப்பட்ட பெயர் ‘பெயர்ச்சொல்’ எனப்பட்டது.

பொருளின்  புடைப்பெயர்ச்சியைக்  கூறும் சொல்  ’வினைச்சொல்’
எனப்பட்டது.

பெயர்ச்சொல்  வினைச்  சொற்களின்   இடமாக  வரும்   சொல்
’இடைச்சொல்’ எனப்பட்டது.

இவ்வாறு     மூன்று சொற்களுக்குக்  காரணம்  கூறுவது  போல,
’உரிச்சொல்’   என்பதற்குக்  காரணம்  எளிதில்  கூற  இயலவில்லை.
உரையாசிரியர்களும், ஆராய்ச்சியாளர்களும் அவரவர்க்குத் தோன்றிய
காரணங்களைக் கூறினர். அவை வருமாறு;

1. உரிச்சொல்லாவது     பொருட்கு   உரிமைப்பட்டு    நிற்பது
இளம்பூரணர்.

2. இசை, குறிப்பு, பண்பு  என்னும்  பொருட்குத்  தாமேயுரியவாய்
வருதலின் உரிச்சொல்-சேனாவரையர், நச்சினார்க்கினியர்.

3.ஒரு   வாய்பாட்டாற்   சொல்லப்படும்   பொருட்குத்  தானும்
உரித்தாய் வருவது-தெய்வச்சிலையார்.

4.செய்யுட்கே    யுரித்தாய்    வருதலின்    உரிச்சொல்நன்னூல்
உரைகாரர்கள்.

5.பெயர்        வினைகளுக்கு      உரித்தாய்      வருதலின்
உரிச்சொல்சடகோபராமாநுசாசாரியர்.

6.பண்புக்கு   உரிமை  பூண்ட  சொல்  உரிச்சொல்   சிவஞான
முனிவர், வீரமாமுனிவர்.

7.உலக     வழக்குப்   பொருள்  ஒன்றாக  இருக்க  இலக்கியக்
கருத்தாக்கள் தனியுரிமையுடன்  தரும் தனிப் பொருள் கொண்ட
சொல் உரிச்சொல்-ஆதித்தர்

8.சொல்    பிறப்பதற்குரிய   சொல்    உரிச்சொல்இலக்குவனார்
முதலியோர்.

9.பொருட்கு        உரிமைப்       படுத்தப்பட்ட      சொல்
உரிச்சொல்சிவலிங்கனார்.

எது நன்று:

1.மேற் காட்டிய  கருத்துகளுள்  முதல்  மூன்று  கருத்துகளையும்
பொருளுக்கு  உரிமை பூண்டு வருவது உரிச்சொல் என்னும்  கருத்தில்
ஒன்றாகக்  கொள்ளலாம்.  பொருள்  என்பது ஒரு சொல் உணர்த்தும்
பொருளைக்  குறிக்கும்  எனக்  கொண்டனர்  இளம்பூரணர் தெய்வச்
சிலையார் ஆகியோர். சேனா


முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்