முகப்பு

தொடக்கம்

டாக்டர். க. த. திருநாவுக்கரசு,
இயக்குநர்,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,
சென்னை-113.

முன்னுரை

தொல்காப்பியத்திற்கு உரைவளம் ஒன்றினை வெளியிடும் பணியினைத் தொடர்ந்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் கடந்த பத்து ஆண்டுகளாகச் செய்து வருகிறது. இந்த வரிசையில் ‘எச்சவியல்’ என்னும் இவ்வெளியீடு இருபதாவது நூலாகும்.

1 தொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்தில் கூறப்பட்ட செய்திகளுக்கு ஓர் ஒழிபியலாக, இந்த இயலைக் கொள்ள வேண்டும்.  இன்றைய மொழியியலின் கண்ணோட்டத்தில் காணுகின்ற பொழுது, தமிழ் மொழியின் தொடரிலக்கணக் கூறுகள் சிலவற்றைத் தொல்காப்பியனார் இந்த இயலில் விளக்கியுள்ளமை புலனாகும். இந்த இயலின் நூற்பாக்கள் சிலவற்றிற்குப் போதிய அளவிற்குத் தெளிவான உரை அமையாமை ஒரு குறையாகும்.  இந்தக் குறையைப் போக்கும் வகையில், பல்வேறு உரையாசிரியர்களின் கருத்துகள் இங்குத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.  மாணவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும்  இந்த நூல் பேருதவியாக அமையும் என நம்புகின்றேன்.

இந்த அரும்பணியை அயராது செய்துவரும் பேராசிரியர் ஆ. சிவலிங்கனார் அவர்களுக்கு நன்றி பாராட்டத் தமிழ் உலகம் கடமைப்பட்டுள்ளது.  இப் பேராசிரியரின் பணி, மேன்மேலும் சிறந்துவிளங்க, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் உறுதுணையாக நிற்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

இந்நூலின் அச்சுத் தாள்களைச் செம்மையாகத் திருத்தம் செய்து கொடுத்து உதவிய புலவர் சி. கணேசன் M.A., M.Ed., அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளுகின்றேன். 

இந்நூலினை அழகுற அச்சிட்டுத் தந்த ‘ஆர்த்தி பிரிண்டிங் அவுஸ்’ நிறுவனத்தாருக்குப் பாராட்டுதல்களை உரித்தாக்குகின்றேன்.

சென்னை
30-12-88
  க.த.திருநாவுக்கரசு
இயக்குநர்,
உ.த.ஆ.நி,
முன் பக்கம்

மேல்

அடுத்த பக்கம்