iii

 

இந்தப் பதிப்பு

முதற்பதிப்பின் மறு படியாக உள்ள இதனுள் சிறந்த பல திருத்தங்கள் இடம்
பெற்றுள்ளன. உதாரண இலக்கியங்களும், மேற்கோட் சூத்திர முதலியனவும் முன்னிலும்
பெரிய எழுத்தில் தெளிவாகத் தரப்பெற்றுள்ளன. பதிப்பு வேலை அவசரத்தில் நடத்த
வேண்டியிருந்ததனால், அச்சுப் பிழைகள் சில நேர்ந்திருத்தல் கூடும். அன்பர்கள்
அதனைப் பொறுத்துக் குற்றங் களைந்து குறைபெய்து வாசித்துக்கொண்டு, எங்களுக்கு
ஆதரவு தந்தருள வேண்டுகிறோம்.

திருவான்மியூர் இங்ஙனம்
 16-8-1968
நூல் நிலையத்தார்