முனைவர் மு. தமிழ்க்குடிமகன், எம்.ஏ., பிஎச்.டி.
தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு,
இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர்
|
ஏறத்தாழ, கி.மு.500இல் பிறந்த தொல்காப்பியத்திற்குப்
பின்னால் அதிலுள்ள
இலக்கண அமைப்புகளை விரிவுபடுத்தும் வகையிலும், வேண்டாதன விடுத்து
வேண்டுவனவற்றைச் சிறப்பித்துச் சொல்லும் வகையிலும் பல இலக்கண நூல்கள்
வெளிவந்துள்ளன. புறப்பொருளின் விரிவாக ‘புறப்பொருள் வெண்பா மாலை’யும்,
அகப்பொருளின் விரிவாக ‘நம்பியகப் பொருளும்’, யாப்பு அணி தொடர்பாக
‘யாப்பருங்கலக் காரிகை’, தண்டியலங்காரம்’ ஆகியவையும் வெளிவந்துள்ளன. எழுத்து,
சொல் ஆகியவற்றின் இலக்கணக் கூறுகளை உள்ளடக்கிய நூலாக ‘நன்னூல்’
வெளிவந்துள்ளது. காலமுறைப்படி இது 13ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்
வெளிவந்ததெனலாம். பவணந்தி முனிவர் ‘தொல்காப்பியம் பிறந்து’ ஏறத்தாழ 1700
ஆண்டுகளுக்குப் பின்னால் இந்த நூலை எழுதியுள்ளார். இதற்கு விருத்தியுரைகளும்,
காண்டிகை உரைகளும் வெளிவந்துள்ளன. அவைபற்றியெல்லாம் ஜெருமனி நாட்டில்
ஹைடெல்பெர்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் திரு. அ. தாமோதரன் விரிவாக
அலசி ஆராய்ந்துள்ளார்.
சங்கர நமச்சிவாயர் செய்து சிவஞான முனிவரால் திருத்தப்பட்ட
புத்துரையையும்
வெளியிட்டுள்ளார். ஒருகாலத்தில் ‘நன்னூல் - நன்னூலன்று’ என்ற தலைப்பில்
தொல்காப்பியர் காலத்தில் இல்லாத சில புது வழக்குகளைப் புகுத்தியதால், தமிழுக்குத்
தீங்கு விளைவித்து விட்டதாகவே கருதி, ‘மொழி ஞாயிறு’ ஞா. தேவநேயப்பாவாணர்
அவர்களும் ‘பன்மொழிப்புலவர்’ அப்பாதுரை அவர்களும் திறனாய்வு செய்து
கட்டுரைகள் எழுதினார்கள். ‘ஆவோடு அல்லது யகரம் முதலாது’ என்ற நூற்பா
தொல்காப்பியத்தில் இருக்கும்போது நன்னூலார் சில வடமொழிச் சொற்களையும்
இணைத்துக்கொண்டு இலக் |