xxxi

அளவு நிறை எண்ணுப்பெயர்கள் நிலைமொழியாக, அவற்றில் குறைந்த மதிப்புடைய ஒத்த பெயர்கள் வருமொழியாய் வந்து புணரும் ஞான்று ‘ஏ’ என்றும் சாரியை இடையே வரும் என்று குறிப்பிடும் தொல்காப்பிய நூற்பாவினை அடுத்து வரைந்து, அதன் உரையில் தொகைமரபினுள்ளும் பிறாண்டும் காணப்பெறும் எண் நிறை அளவு பற்றிய செய்திகளில் தேவைப்படுவன எல்லாவற்றையும் சுட்டி, அந்நூற்பா வுரையிறுதியில் அளவிற்கும் நிறையிற்கும் மொழி முதலாகி உளவெனப் பட்ட ஒன்பான் எழுத்தையும் எடுத்துக்காட்டி விளக்கமும் நுவலுகிறார்.

நாழி என்பதன்முன் உரி என்ற வருமொழி வருமாற்றையும், உரி என்பதனை நிலைமொழியாகக் கொண்டு பிற சொற்கள் வந்து புணருமாற்றையும் தனி நூற்பா வாயிலாக விளக்குகிறார்.

தொல்காப்பியனாருக்கு எகரவினா யாவினாவின் திரிபு எனினும், பிற்காலத்தில் எகரவினா பெரிதும் பழக்கத்தில் வந்தமையான், ‘எகரவினா முச்சுட்டு’ப் பற்றி யமைந்துள்ள நன்னூல் நூற்பாவினைச் சிறிது திரித்து வரைந்து சுட்டுப்பற்றி அகர இகர உகர ஈறுகளில் நச்சினார்க்கினியர் வரைந்தன யாவையும் இயைபுபடுத்திக் குறிப்பிடுகிறார்.

தொல்காப்பியனார் ஒற்றீற்றுத் தொழிற்பெயர்களை ‘ஞகாரை ஒற்றிறு தொழிற்பெயர்’ என்றாற்போல ஈறு தோறும் எடுத்துவிதக்கும் மரபினை நீத்து. சுருக்கநூலாதலின், நன்னூல்போல எல்லா ஈறுகளையும் தொகுத்து விதி கூறப்புக்க இவர், நன்னூலார்போல ‘ ஞ ண ந ம ல வ ள ன ஒற்றிரு தொழிற்பெயர் ஏவல் வினை’ என இரண்டனையும் கூறாது, தொழிற்பெயரை மாத்திரம் குறிப்பிட்டு நூற்பா யாத்து அதன் உரையில் தொழிற் பெயர்கள் பற்றிய நூற்பாக்களில் நச்சினார்க்கினியர் உரைத்தனவாகிய செய்திகள் யாவற்றையும்