XLIII

சாரியைஉள்வழித் தன்னுருபு நிலையலும்
சாரியை இயற்கை உறழத் தோன்றலும்
உயர்திணை மருங்கின் ஒழியாது வருதலும்
அஃறிணை விரவுப்பெயர்க்குஅவ்வியல்நிலையலும்
மெய்பிறி தாகிடத்து இயற்கை யாதலும்
அன்ன பிறவும் தன்னியல் மருங்கின்
மெய்பெறக் கிளந்து பொருள்வரைந்திசைக்கும்
ஐகார வேற்றுமைத் திரிபென மொழிப.

157
77வேற்றுமை அல்வழி இஐ என்னும்
ஈற்றுப்பெயர்க் கிளவி மூவகை நிலைய
அவைதாம்,
இயல்பா குநவும் வல்லெழுத்து மிகுநவும்
உறழா குநவும் என்மனார் புலவர்.

158
78உயிரும் புள்ளியும் இறுதி யாகி
அளவும் நிறையும் எண்ணும் சுட்டி
உளவெனப் பட்ட எல்லாச் சொல்லும்
தத்தம் கிளவி தம்மகப் பட்ட
முத்தை வரூஉம் காலந் தோன்றின்
ஒத்தது என்ப ஏயென் சாரியை.

164
85சாவ என்னும் செயவென் எச்சத்து
இறுதி வகரம் கெடுதலும் உரித்தே.

209
95அன்றுவரு காலை ஆவா குதலும்
ஐவரு காலை மெய்வரைந்த கெடுதலும்
செய்யுள் மருங்கின் உரித்தென மொழிப.

258
97எகர ஒகரம் பெயர்க்கீ றாக
முன்னிலை மொழிய என்மனார் புலவர்
தேற்றமும் சிறப்பும் அல்வழி யான.

272
98தேற்ற எகரமும் சிறப்பின் ஒவ்வும்
மேற்கூ றியற்கை வல்லெழுத்து மிகாஅ.
273