| 1 | மலைமக ளொருபால் மணந்துல களித்த தலைவனை வணங்கிச் சாற்றுவ னெழுத்தே.
 
 
 | 
| 4 | உயிரு முடம்புமென முதலிரு வகைத்தவற் றுயிரீ றாறுமெய் மூவா றென்ப
 வம்முப் பானு மதனது விரியே.
 
 
 | 
| 5 | குற்றிய லிகரங் குற்றிய லுகர மாய்தமொ டுயிர்மெ யீரள பையௌ
 மஃகான் குறுக்க முள்ளுறுத் தொன்பதுஞ்
 சார்பின் பால வென்மனா ரவற்று
 ளுயிர்மெய் யிரட்டுநூற் றெட்டுயி ரளபே
 ழொற்றளபு பதினொன் றொன் றொன் றேனைய
 வாயிரு நுற்றெண் ணைந்துமதன் விரியே.
 
 
 | 
| 8 | தோற்ற மளபு செய்கை பொருள்வடி வேற்றன வொத்தலி னேற்புடை யினத்தினுஞ்
 சிறப்பினு நெறிப்படச் செறிந்தீண் டம்முத
 னடத்த றானே முறையெனல் வேண்டும்.
 
 
 | 
| 9 | உயிருழப் புதானனி னாத முச்சி மிடறுர மூக்குற் றிதழ்நாப் பல்லணத்
 தடைந்து பின்ன ரவற்றது வினையான்
 வேறுவே றெழுத்தொலி யாய்வரல் பிறப்பே.
 
 
 | 
| 10 | அவ்வழி யாவி யிடைமிட றுச்சி வன்மை மென்மைமூக் கிசையிற் றோன்றும்.
 
 
 | 
| 12 | முதலிடை நுனிநா அண்ணமுற முறையின் கஙவுஞ் சஞவும் டணவு மண்ப
 லடிநா முடியுறத் தநவு மீகீ
 ழிதழுறப் பகார மகார மிரண்டு.
 |